Monday, November 24, 2014

இன்டர்நெட்டில் பணம் சம்பாதிக்க வேண்டுமா?

Mine Crypto coin and Earn Money 
இன்டர்நெட்டில் பணம் சம்பாதிக்க வழி ஏதாவது உள்ளதா? என்று இணையத்தை பயன்படுத்தும் பலர் நினைப்பது உண்டு. அவர்களுக்கு இந்த இடுகை பயன் உள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
முதலில் Crptocurrency யை பற்றி நாம் தெரிந்து கொள்வோம்,
2009 தற்போது புழக்கத்தில் உள்ள கரன்ஸிக்கு மாற்றாக ஓபன் சோர்ஸ் மென்பொருள் கொண்டு உருவாக்கப்பட்டது பிட்காயின் (BitCoin). இதை இணையத்தில் சேவை மற்றும் பொருட்கள் வாங்க பயன்படுத்திக்கொள்ளலாம். தேவையென்றால் தற்போது புழக்கத்தில் உள்ள கரன்ஸியாக மாற்றியும் கொள்ளலாம்,  இந்த நாணயத்தை எந்த அமைப்போ. நாடோ கட்டுப்டுத்தவில்லை என்பதுதான் இதன் முக்கிய சிறப்பம்சமாகும். இந்த இடுகையை நான் தொட்டச்சு  (?) செய்தபோது ஒரு பிட்காயின் நாணயத்தின் மதிப்பு அமெரிக்க டாலரில் 381.87 ஆகும், இந்திய மதிப்பில் இந்திய மதிப்பில் ருபாய் 23,622.48 .!!!!!
நாடுகள் வெளியிடும் கரன்ஸி போல் Bitcoin அச்சடிக்கப்படுவதில்லை, முற்றிலும் மென்பொருள் கொண்டு கட்டுப்படுத்தப்படும் இது. Hack செய்ய முடியாதபடி ஓபன் சோர்ஸ் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது,
இந்த நாணயத்தை நீங்கள் கையாள விரும்பினால் Bitcoin Wallent எனப்படும் மென்பொருளை உங்கள் கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்வதன் முலம் செய்யலாம். இம்மென்பொருளை டவுன்லோடு செய்தவுடன் உங்களுக்கென தனி குறியீடு கிடைக்கும், இதைக்கொண்டு நீங்கள் பண பரிவர்தனை செய்துகொள்ள முடியும்,
சரி இதைக்கொண்டு எப்படி பணம் சம்பாதிப்பது என்ற விஷயத்திற்கு வருவோம், நான் ஏற்கனவே கூறியது போல் பிட்காயின் அச்சடிக்கப்படுவதில்லை, அதற்கு பதிலாக Mining செய்யப்படுகிறது, அதாவது தங்கம் வெள்ளியை எப்படி சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கின்றோமோ அதுபோல் பிட்காயினையும் Mining செய்துகொள்முடியும், ஆனால் இதுவும் மென்பொருள் கொண்டுதான் செய்யப்படுகின்றது.
சுருக்கமாக சொல்வதென்றால் உலகில் நடக்கும் பிட்காயின் பணபரிவதனைக்கு சரிபார்க்க உங்கள் கணிப்பொறியினை வழங்குவதன் முலம் பிட்காயினை பெறமுடியும். நீங்கள் எவ்வளவு கணிப்பொறி சக்தியை வழங்குகிறீர்களோ அந்தளவுக்கு வெளியிடப்டும் பிட்காயின் பங்குகள் உங்களுக்கு கிடைக்கும்,
கொஞ்சம் காலம் முன்பு வரை CPU சக்தியை கொண்டு Mining செய்துவந்தவர்கள் பின்பு GPU (கொஞ்சம் சக்தி வாய்ந்த கிராப்பிக்ஸ் கார்டு) கொண்டு மைனிங் செய்து வந்தனர்.
ஆனால் குறிய காலத்தில் இவை அனைத்தும் பின் தள்ளப்பட்டு, Mining செய்வதற்கென்றே தனிப்பட்ட இயந்திரங்கள் மார்கெட்டில் வலம் வருகின்றன.இதற்கு ASIC இயந்திரங்கள் என்று பெயர், ASIC என்றால் (
Application-specific integrated circuit) அதாவது ஒரு குறிப்பிட்ட 
பயன்பாட்டிற்கொன்று உருவாக்கப்படும் இயந்திரங்களை ASIC என்றழைக்கின்றனர்
நீங்கள் இன்டர்நெட்டில் பணம் சம்பாதிக்க விரும்பினால் ஒரு பிட்காயின் ASIC
Mining இயந்திரத்தை வாங்கி உங்கள் Wallet குறி எண்னை program செய்து பிளக் செய்துவிட்டால் போதும், உங்கள் வாலட்டில் பிட்காயின்கள் விழத்தொடங்கிவிடும்,

பிட்காயின் ஓபன் சோர்ஸ் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால், இன்று பிட்காயின் போல் பல நாணயங்கள் உலா வருகின்றன, அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கே பார்க்கலாம்,
 Litecoin
Market cap: $353.3 million
Price: $ 3.63
Year created: 2011
Litecoin sets itself up as the "silver to Bitcoin's gold." Confirmations of transactions are purportedly processed more quickly with Litecoin than Bitcoin. The way it's mined also eliminates some of the advantage for miners with specialized computer hardware.

Peercoin

Market cap: $71.3 million
Price: $ 0.763499
Year created: 2012
Peercoin markets itself as using less energy and being more environmentally sustainable than some of the other coins on the market. It says it is designed to have a 1 percent rate of inflation.

Primecoin

Market cap: $7.1 million
Price: $0.142
Year created: 2013
With this coin, miners have to use their computers to find Cunningham chains, which are sequences of prime numbers. Primecoin touts the mining of such prime numbers as "providing potential scientific value in addition to minting and security for the network."

Namecoin

Market cap: $26.9 million
Price: $3.30
Year created: 2011
Namecoin was created to explore the record-keeping side of the cryptocurrency technology. It acts as a peer-to-peer, decentralized domain name system for dot-bit domains. People can purchase dot-bit domains with Namecoin, and then Namecoin tracks the transaction in the "block chain," or public ledger.

Ripple

Market cap: $1.4 billion
Price: $ 0.008920
Year created: 2013
Ripple has already attracted millions in venture capital, including from Google Ventures. In contrast to Bitcoin, there is no mining of Ripples. Ripple also is set up as a payment network, not only for Ripple, but for other currencies, and as an automated system for currency trades.


இந்த இடுகை பயனுள்ளதாக கருதினால், என்னுடைய பிட்காயின் கணக்கிற்கு டொனோட் செய்யலாம், முகவரி

17kDjPSbwJosah76kuhEM8cvH6Birvcz9a

Saturday, November 15, 2014

வலைதளம் துவங்கஇணையத்தில் வலைதளம் துவங்க வேண்டுமா?

1. நீங்கள் முதலில் செய்ய வேண்டியது டொமைன் எனப்ப்டும் வலைதள பெயரினை பதிவு செய்வதுதான். .com / .in /.net /.org என பல வகை Top Level Domain -ல் முடியும் பெயர்களை நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம். முடிந்தவரையில் அனைவராலும் எளிதில் புரிந்துகொள்ள கூடிய வகையில் குறைந்த எழுத்துக்களை கொண்ட பெயரினை தேர்வு செய்வது நன்று. பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு சலுகை  விலையில் பெயர்களை பதிவு செய்ய முன்வரும் ஆனால் நீங்கள் அடுத்த வருடம் புதுப்பிக்க முயலும்போது அதிகபட்ச தொகை செலுத்த வேண்டிவரும் எனவே முதல் வருடத்தை போலவே அனைத்து வருடங்களுக்கும் பணம் பெறும் நிறுவனங்களை அனுகுவது உத்தமம்.  டொமைன் பெயர் பதிவினை பொறுத்தவரையில் 500 முதல் 600 வரை இந்திய மதிப்பில் ஒரு ஆண்டுக்கு செலுத்தவேண்டியிருக்கும்.

2. அடுத்து நீங்கள் செய்யவேண்டியது நீங்கள் ஒரு நல்ல சர்வர் ஸ்பேஸை (Server Space) வாங்க வேண்டியதுதான். இதில் பல விடயங்களை நாம் கவனிக்க வேண்டியிருக்கும். எவ்வளவு அளவுள்ள இடம் பெறுகின்றீர்கள், எவ்வளவு பேன்ட்டுவிட்த் உங்களுக்கு வழங்கப்படும், கன்ட்ரோல் போனல் (சிபோனல். டெரக்கட் அட்மின், பிளஸ்க் இவற்றில் ஏதேனும் ஒன்று) வழங்கப்படுகின்றதா. ஆகியவற்றுடம் சர்வர் அமைந்திருக்கும் இடம் மற்றும் Hardware ஆகியவை மற்றும் பேக்கப் வசதி. Script Installation Facility ஆகியவை உள்ளனவா என்று அவசியம் பார்க்க வேண்டும். குறைந்தபட்சமாக 1000 முதல் 2000 வரை நீங்கள் வருடத்திற்கு செலுத்தவேண்டியிருக்கும்.

3. அடுத்து நாம் கவனிக்க வேண்டியது வலைதள வடிவமைப்பு, உங்களுக்கு ஓரளவு எச்.டி.எம்.எல்., பி.எச்.பி., சி.எஸ்.எஸ் போன்றவற்றில் அனுபவம் இருந்தால் நீங்களே வலைதளத்தினை வடிவமைத்துக்கொள்ள முடியும். இல்லையெனில் 2000 முதல் 3000 வரை ஒருமுறை செலவிடுட்டு நீங்கள் சர்வர் ஸ்பேஸ் வாங்கும் நிறுவனத்திடமே  வடிவமைத்துத்தர கேட்கலாம்.

ஆக மொத்தம் உங்களுக்கு முதல் வருடம் குறைந்தபட்சம் 3000 முதல் 5000 வரையிலும் தொடரும் வருடங்களில் 1500 முதல் 2500 வரையும் உங்கள் வலைதளத்திற்காக செலவிட வேண்டியிருக்கும். இகாமர்ஸ் வலைதளத்திற்கு கூடுதலாக 2000 முதல் 4000 வரை முதல் வருடம் செலவிட வேண்டியிருக்கும்.

ஜாப் பேர்டல், மேட்மேனி வலைதளம் போன்றவற்றை துவங்க நீங்கள் இதற்கென்று முன்னரே வடிவமைக்கப்பட்ட ஸ்கிரிப்டுகளை வாங்கி பயன்படுத்தலாம் இவைகளுக்கு நீங்கள் தனியாக பணம் செலவிட வேண்டியிருக்கும்.

குறைந்த கட்டணத்தில் வலைதளம் வடிவமைக்க என்னை 9629862568 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,

கே.எஸ்.பாஸ்கர்
9629862568
k.s.basker@gmail.com
www.tinyhost.in