Saturday, November 26, 2011

பாஸ்போர்ட் விண்ணப்ப குளறுபடிகள்



வேலைவாய்ப்பு வேண்டி வெளிநாடு செல்லும் இளைஞர்கள், வேலை நிமித்தமாக வெளிநாடு செல்ல புதிய பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பிப்பவர்கள் என்று மணிக்கணக்கில் சாஸ்திரி பவன் முன்பு வரிசையில் நிற்கும் அவல நிலை தொடர்ந்து இருந்தது. இந்த நிலை மாற Seva Project என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் 16 தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்தது. இந்த புதிய திட்டத்தின் படி சென்னை சாலிகிராமம், அமைந்தகரை மற்றும் தாம்பரம் ஆகிய மூன்று இடங்களில் பாஸ்போர்ட் மையங்களையும் http://passportindia.gov.in என்ற புதிய வலைதளத்தையும் அறிமுகப்படுத்தியது.

இந்த புதிய திட்டத்தின்ப வலைதளத்தில் புதிய விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துகொண்டு மேற்கண்ட மையங்களில் ஏதேனும் ஒன்றினை தேர்வுசெய்து நேர்காணலுக்கான நேரத்தினை பதிவு செய்து கொள்ளலாம். பின்னர் அந்த தேதியில் மையத்திற்கு நேரில் சென்று ஆவணங்களை சமர்பித்து பாஸ்போர்டுக்கான கட்டணத்தை செலுத்தலாம். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு மூன்று தினங்களில் பாஸ்போர்ட் வீடு தேடி வரும்.

அட்டாகாசமான திட்டம், அருமையான முறை என்று பெரும் ஆவலுடன் வரவேற்கப்பட்ட இந்த திட்டத்தை அமலுக்கு கொண்ட வந்த நாள் முதல் பல குளறுபடிகள்.

ஆன் லைனில் கணக்கு துவங்குதல், பாஸ்போர்ட் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்தல், தேவையான ஆவண நகல்களை ஆப்லோட் செய்வதுவரை எல்லாம் சரியாக உள்ளது. ஆனால் நேர்காணலுக்கான நேரத்தை மட்டும் தேர்வு செய்ய சென்றால் எப்போதுமே மேற்கண்ட மையத்தில் தற்போது நேர்காணல் நேரம் எதுவும் ஒதுக்க இயலாது என்ற பதிலே வருகின்றது.

இதனால் ஆன் லைனில் விண்ணப்பபித்துவிட்டு வாரக்கணக்கில் காத்துக் கிடப்பவர்கள் பழைய முறையே ஓரளவு பரவாயில்லை என்று புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

சில இடைத்தரகர்கள் குறிப்பிட்ட தொகையினை பெற்றுடக்கொண்டு நேர்காணலுக்கான நேரத்தை ஓதுக்கி தருகின்றனர். அவர்களால் மட்டும் எப்படி நேர ஒதுக்கீடு பெற முடிகிறது என்பது சிதம்பர ரகசியம்.

மேற்கண்ட குறைகள் களையப்பட்டால் புதிய பாஸ்போர்ட் திட்டம் அமோகமாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை.

No comments:

Post a Comment