Saturday, November 26, 2011

பிளாக்கர் டொமைன்


BlogSpot Domain
பிளாக்கர் வலைதளத்தினை உருவாக்க பதிவு செய்யும்போது உங்களுக்கு பிளாக்ஸ்பாட்.காம் சப் டொமைன் இலவசமாக கிடைக்கும் உதாரணமாக yourname.blogspot.com ஆனால் நீங்கள் உங்களின் சொந்த .COM/.NET/.ORG/.IN டொமைன்களையும் உபயோகித்துக்கொள்ள பிளாக் ஸ்பாட் அனுமதி அளிக்கின்றது.
நீங்கள் ஏதேனும் டொமைன் பதிவு நிறுவனத்தை அணுகி உங்களுக்கான டாப் லெவல் டொமைனை பதிவு செய்து கொள்ள வேண்டும்,
இதற்கு கட்டணமாக ரூபாய் 500 வரை செலுத்தவேண்டியிருக்கும். இவ்வாறு பெறப்படும் டொமைனை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கவேண்டியது நமது கடமை.
டொமைன் பதிவு செய்யும்போது முக்கியமாக கவனிக்க வேண்டியது DNS Management என்னும் வசதியை அந்நிறுவனம் உங்களுக்கு வழக்குறதா என்பதைதான். பல நிறுவனங்கள் இவ்வசதியினை இலவசமாகவே வழங்குகின்றது. சில நிறுவனங்கள் சிறு தொகையை பெற்றுக்கொண்டு இவ்வசதியினை தரும். உங்கள் பிளாக்கினை புதிய டொமைன் கொண்டு இயக்க சில DNS ரிக்கார்டுகளை நீங்கள் மாற்ற வேண்டும். எனவே டொமைன் டி.என்.எஸ் மேனேஜ்மென்ட் வழங்கப்படுகின்றதா என்பதை தெரிந்து கொண்டு அந்நிறுவனத்திடம் டொமைன் பதிவு செய்வது நல்லது.
அடுத்ததாக கவனிக்க வேண்டியது கன்ட்ரோல் பேனல். நாம் வாங்கும் டொமைன், டி.என்.எஸ். ரிக்கார்டு ஆகியவற்றை கையாள ஏதுவாக கண்ட்ரோல் பேனல் வசதியினை அந்நிறுவனம் வழங்குகின்றதா என்பதை கவனிக்க வேண்டும்.
டொமைன் பதிவு செய்வதற்கு முன்பு என்னென்ன மாற்றங்களை உங்கள் பிளாக்கில் செய்ய வேண்டும் என்று பார்போம்.
உங்கள் பிளாக்கர் கணக்கில் சென்று







செட்டிங் என்ற லிங்கினை கிளிக் செய்யவும்











பின்னர் அதில் Publishing என்ற லிங்க்கை தேர்வு செய்து Custom Domain என்பதை தேர்வு செய்யவும்.இங்கு பிளாக்கர் மூலம் புதிய டொமைன் வாங்குவதற்கான இணைப்பு கிடைக்கும் அதன் அருகில் Already own a domain? Switch to advanced settings
என்ற இணைப்பில் சொடுக்கவும்.







இதில் உங்கள் புதிய டொமைனை குறிப்பிடவும் உ.ம் yourdomain.com பின்னர்
Save செய்யயும்.

பின்னர் நீங்கள் டொமைனை பதிவு செய்த நிறுவனம் அளித்த கண்ட்ரோல் போனல் சென்று DNS Management என்பதை தேர்வு செய்யவும். அதில்
CNAME Record என்பதை தேர்வு செய்து
www    ghs.google.com என கொடுக்கவும்.

அவ்வளவுதான். மேற்கண்ட டி.என்.எஸ் 24 மணிநேரம் முதல் 48 மணி நேரத்திற்குள் செய்ல்பட துவங்கி உங்கள் பிளாக் உங்கள் மொமைன் பெயரில் இயங்கத் துவங்கிவிடும்.

1 comment:

  1. ஆச்சரியமான கணினி தகவல்கள், அற்புதமான மென்பொருட்கள், உபயோகமான தொழில்நுட்ப தகவல்கள் மற்றும் டிப்ஸ்&ட்ரிக்ஸ் போன்ற அரிய தகவல்களை நீங்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே இந்த இணையத்தளம் உருவாக்கபட்டது.

    தங்களுடைய தளத்தில் தன்னுடைய ப்ளாக்கு இணைப்பு கொடுக்க முடியுமா நண்பா

    www.computertricksintamil.blogspot.com

    இணைப்புக்கு என்னுடைய தளத்தில் இமேஜ் ஒன்றை வைத்துளேன் அதனை பயன் படுத்தி கொள்ளுங்கள் நண்பரே

    தன்னுடைய தளத்தை உங்களுடைய தளத்தில் இணைத்து கொண்டால் உங்கள் தளத்தின் ஒரு விளம்பர இமேஜ் ஐ நான் என் தளத்தில் விளம்பரம் செயுகிரேன்

    நன்றி தோழா

    ReplyDelete