Wednesday, December 21, 2011

பொன் மொழிகள் சில...- டாக்டர் அப்துல் கலாம்.

சிரிப்பு என்பது மனதை வலிமைப்படுத்தி
புத்துணர்வுடன் வைத்திருக்கும் மாமருந்து ஆகும்.

சிரிக்கத் தெரிந்த ஒரே இனம் மனித இனம் தான்.
ஆரோக்கியத்திற்கான பல்வேறு சுவைகளில் நகைச்சுவையும் ஒன்று.

இந்திய மக்கள் குறைவாக சிரிக்கின்றார்கள்.
அதிலும் தமிழ் மக்கள் மிகக் குறைவாக சிரிக்கிறார்கள்.

நாம் உடல் நலமுடனும், மன நலமுடனும், மன வலிமையுடனும் வாழ
சிரிப்பு அவசியம். அது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

- டாக்டர் கலாம்.
http://www.tamilthottam.in/t21741-topic

Saturday, December 17, 2011

உலகிலேயே மலிவான இந்திய கம்ப்யூட்டர்

ரூபாய் 2999 விலையிட பட்டுள்ள உலகின் மலிவான டேப்லட் கம்ப்யூட்டரை நீங்கள் இப்போது ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். வரும் ஜனவரி மாதம் முதல் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய இந்த கணினி விற்பனைக்கு வர  இருக்கின்றது.

2999 ரூபாய்க்கு அப்படி என்ன வசதிகள் கிடைக்கும் என்கிறீர்களா. உங்கள் பார்வைக்கு ஆகாஷ் என்று பெயரிட பட்டுள்ள கம்ப்யூட்டர் வசதிகள் இதோ

  • 7″ resisitive touch screen (800 x 480 px screen resolution)
  • Android 2.2 Froyo operating system
  • 366 MHz processor
  • USB, GPRS, Wi-Fi
  • SIM card Support for making & receiving calls, browsing Internet using GPRS
  • 256MB RAM & 2GB Flash memory (is expandable upto 32GB using an external SD card)
  • PDF Viewer & Text Editor Support
  • 3.5mm headset jack
  • High quality video streaming & playback support
  • Includes Games, Full office, Educational softwares etc…
  • Battery Backup: upto 180 minutes
  • Weight: 350gms
  • Optional Accessories: Car charger & Keyboard case which cost you extra.
  • ஆன்லைனில் ஆர்டர் செய்ய http://www.ubislate.com/prebook.html
குறைந்த வசதிகளுடன் கூடிய ரூபாய் 2500 மதிப்பிடபட்டுள்ள இப்போது உடனே பெற முடியும் ஆனால் இதில் சிம் வசதி இருக்காது. ஆர்டர் செய்ய http://www.akashtablet.com/order-now.html வலைதளத்திற்கு செல்லவும்.

Monday, November 28, 2011

கூகுள் வழங்கும் இலவச டொமைன் மற்றும் வலைதளம்

கூகுள் நிறுவனம் Hostgator Web Hosting நிறுவனத்துடன் இணைந்து இந்திய நிறுவனங்களுக்கு இலவச டொமைன் மற்றும் வலைதள சேவையை அளித்து வருகின்றது.
இந்த ஆபர் மூலம் எந்த ஒரு இந்திய நிறுவனமும் .in டொமைன் மற்றும் வலைதளத்தினை முதல் வருடத்திற்கு இலவசமாக பெற முடியும்.
அடுத்த வருடம் தொடர விரும்பினால் Hostgator நிறுவனத்தின் சேவையை அதற்கான கட்டணம் செலுத்தி பெறலாம். இதற்கு விண்ணப்பிக்க கீழ்கண்ட வலைதளத்திற்கு செல்லவும்.

Free easy-to-build professional website 
Free .in domain name and hosting for one year 
Free email addresses 
Free 365 days support 

Think nice opportunity for Indian Business ppls. does anybody used this offer? 
website : http://www.indiagetonline.in/

Sunday, November 27, 2011

169 ரூபாயில் அன்லிமிடட் இன்டர்நெட் நிலையன்ஸ் நெட் கனெக்ட்

ரிலையன்ஸ் நிறுவனம் தேர்தெடுக்கப்பட்ட 1000 நகரங்களில் மாதம் ரூபாய் 169 க்கு அன்லிமிடட் இன்டர்நெட் வசதியினை வழங்கி வருகின்றது. CDMA தொழில் நுட்பத்துடன் வழங்கப்படும் இந்த இன்டர்நெட் அதிவேகத்தில் இயங்காது. ஆனால் 253 kbps வேகத்தில் மாதம் 169 என்ற குறைந்த கட்டணத்தில் வேறு எந்த நிறுவனமும் வழங்குவதாக தெரியவில்லை.
இவ்விணைப்பை பெற முதலில் ரூபாய் 1099 .
முதல் மாதம் இலவசமாக இன்டர்நெட் வசதி உள்ளதால் வேறு எந்த தொகையும் செலுத்த வேண்டியிருக்காது.
குறிப்பிட்ட சிறுநகரங்களில் மட்டுமே இந்த வசதி என்பதால் இணைப்பை வாங்கும் முன்பு உங்கள் ஊருக்கு இந்த ஆப்பர் உள்ளதா என்பதை தெரிந்து கொண்டு வாங்குவது நல்லது.

Saturday, November 26, 2011

ஜிமெயிலில் Automatic Reply Mail அனுப்புவதற்கு

கூகுள் வழங்கும் இலவச மின்னஞ்சல் சேவை வசதியான ஜிமெயிலில் ஏராளமான வசதிகள் உள்ளது.

அதில் ஒன்று தான் இந்த Vacation Responder வசதி. நாம் எப்பொழுதாவது வெளியூருக்கு சென்று விட்டாலோ அல்லது வேறு ஏதேனும் சூழ்நிலைகள் காரணமாக உங்களின் மின்னஞ்சலை பார்க்க முடியாமல் போகலாம்.

அந்த நேரத்தில் உங்களுக்கு அனுப்பப்படும் மின்னஞ்சலுக்கு பதில் போட முடியாமல் போய்விடும். உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி விட்டு பதில் வரும் என காத்திருப்பவர்க்கும் ஏமாற்றம் தான் மிஞ்சும்.

நீங்கள் எப்பொழுது திரும்ப வருகிறீர்களோ அப்பொழுது தான் Reply அனுப்ப முடியும். இதனால் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவதோடு மட்டுமில்லாமல் ஏதேனும் தொழில் ரீதியான மின்னஞ்சலாக இருந்தால் உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போகும்.

இந்த பிரச்சினைகளை தீர்ப்பது தான் ஜிமெயிலின் Vacation Responder வசதி. இந்த வசதியின் மூலம் ஒரு குறிப்பிட்ட செய்தியை சேமித்து இந்த வசதியை ஆக்டிவேட் செய்து விட்டால் நீங்கள் இல்லாத சமயத்தில் வரும் அனைத்து மின்னஞ்சல்களுக்கும் Automatic பதில் அனுப்பி விடும். இதனால் மின்னஞ்சல் அனுப்பிவரும் உங்களின் நிலைமையை புரிந்து கொள்வார். பிரச்சினைகள் தவிர்க்கப்படும்.

Vacation Responder வசதியை ஆக்டிவேட் செய்வது எப்படி:

முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.

அடுத்து Options ==> Mail Settings பகுதிக்கு செல்லுங்கள்.

உங்களுக்கு வரும் விண்டோவில் Vacation Responder என்ற வசதி பகுதிக்கு செல்லவும்.

அதில் On என்பதை கிளிக் செய்து Message என்ற பொக்சில் நீங்கள் இல்லாத நேரத்தில் மற்றவர்களுக்கு போய் சேர வேண்டிய பதிலை Type பண்ணவும். பின் Only Send a Response to people in my contacts என்பதை கிளிக் செய்து Save Changes கொடுக்கவும்.

First Day - நீங்கள் மின்னஞ்சல் பார்க்க முடியாமால் போகும் திகதி.
Ends - இந்த வசதியை நிருத்தப்படவேண்டிய நாள்.

பிறகு அந்த கட்டத்தில் உங்களுக்கு வேண்டியதை டைப் செய்து கொள்ளுங்கள். கீழே உள்ள டிக் மார்க் தேர்வு செய்தால் உங்கள் மின்னஞ்சல் Contact List ல் இருந்து வரும் மின்னஞ்சல்களுக்கு மட்டும் Automatic Reply Email அனுப்பப்படும். வேறு மின்னஞ்சல்களுக்கு வந்தால் Automatic Reply அனுப்பாது.

அனைத்தும் தெரிவு செய்த பின்னர் கீழே உள்ள Save Changes என்ற பட்டனை கிளிக் செய்தால் இந்த வசதி ஆக்டிவேட் ஆகிவிடும். அதற்க்கான அறிவிப்பு உங்கள் மின்னஞ்சல் முகப்பு பக்கத்தில் இருக்கும்.

திரும்ப வந்து இதில் உள்ள Endnow லிங்கை அழுத்தினால் இந்த வசதி Off ஆகிவிடும்.


ஒரு பிளாக்கில் பலர் இடுகையிட

கூகுள் பிளாக்கர் இடுகையில் நாம் உருவாக்கும் பிளாக்கர் தளத்தில் பலரின் படைப்புகங் இடம்பெற செய்ய முடியும் என்பது கூகுள் பிளாக்கர் தரும் கூடுதல் வசதியாகும்.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் பிளாக்கின் செட்டிங்ஸ் (Settings) லிங்கை தெரிவு செய்து அதில் Permission என்ற லிங்கை சொடுக்கவேண்டும்.‘





பின்னர் Add Authors என்ற பட்டனை கிளிக் செய்வதுன் மூலம் உங்கள் நண்பர்களை உங்கள் பிளாக்கில் இடுகையிட அழைக்க முடியும். Add Authors பட்டனை அழுத்தியவுடன் உங்கள் நண்பர்களின் இமெயில் முகவரிகளை தரவேண்டியதுதான். கூகுள் அவர்களுக்கு அழைப்புகளை அனுப்பிவிடும்.
படைப்புகளை இடுகையிட உங்கள் நண்பர்களுக்கு வேண்டியதெல்லாம் ஒரு கூகுள் கணக்கு மட்டுமே. அவர் ஏற்கனவே ஜிமெயில் போன்று கூகுள் சேவைகளில் ஏற்கனவே கணக்கு வைத்திருக்கும் பட்சத்தில் நேரடியாகவே இடுகையிட முடியும்.





கமாடிட்டி-பொருள் வணிகம்

தங்கம் விலை உச்சகட்ட வேகத்தில் ஏறிக்கொண்டே வருவதால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கம் வெள்ளி போன்றவற்றின் பக்கம் திரும்பியுள்ளது. தங்கத்தை ஆபாரணமாக வாங்கி விற்பதன் மூலம் ஏற்படும் செய்கூலி சேதார இழப்புகளை கணக்கிட்டால் ஆபாரணமாக தங்கம் வாங்குவது சரிபட்டு வராது என்று தங்கத்தில் முதலீடு செய்ய எக்ஸ்சேஜ் டிரேடட் (இ.டி.எப்) பண்டுகள் பக்கம் சிலர் போக, சிலர் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் யூக வணிகத்தில் ஈடுபடுகின்றனர்.


வேறு எந்த முறையில் தங்கத்தில் முதலீடு செய்தாலும் முழுதொகையையும் செலுத்தியே அதற்கான தங்கத்தை வாங்க முடியும். ஆனால் யூக வணிகத்தில் 100 கிராம் தங்கம் வாங்க விரும்பினால் அன்றைய விலையில் சுமார் 4 முதல் 7 சதவீதம் மட்டும் செலுத்தினால் போதும்!!!

உதாரணமாக 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் தற்போதைய விலை ரூபாய் 2700 என்று வைத்துக்கொள்வோம் 100 கிராம் தங்கம் 2,70,000 (இரண்டு லட்சத்தி எழுபதாயிரம்) ரூபாய் வேண்டும். ஆனால் ஆன்லைன் பொருள் வணிக சந்தை 4 முதல் 7 சதவீதம் மட்டும் அதாவது அதிகபட்சமாக வெறும் 18,900 மட்டும் விளிம்பு தொகையாக செலுத்தினால் போதும் 100 கிராம் தங்கம் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும்.

வாங்கிய பின்னர் 1 கிராம் தங்கம் 50 ரூபாய் விலை ஏறினால் உங்களுக்கு 100x50 = 5,000 ரூபாய் லாபம். தரகு தொகை மற்றும் ஸ்டாம்ப் சார்ஜ் போன்ற செலவீனங்கள் .05 சதவீதம் என்று வைத்துக்கொண்டால் அதிகபட்சமாக 300 ரூபாய் ஆக 5,000 - 300 = 4,700 ரூபாய் உங்களுக்கு லாபம். வாங்கிய அன்றே விலையேறினாலும் உடனே விற்றுவிட்டு வெளியே வரலாம். ஆக உங்கள் முதலீடு 18,900 லாபம் 4,700 ஆக மொத்தம் 23,600 உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.

அட பணம் சம்பாதிக்க இப்படி ஒரு சுலபமான வழியா என்று வியக்க வேண்டாம். ஈட்டி போன்று இரண்டு பக்கமும் கூர்மையான யூக வணிகத்தின் இன்னொரு முகம் மிகவும் பயங்கரமானது. 18,900 விளிம்புத் தொகை செலுத்தி காலையில் 100 கிராம் யூக வணிகத்தில் தங்கம் வாங்குவதாக வைத்துக்கொள்ளோம். மாலையில் 1 கிராம் தங்கம் 50 ரூபாய் குறைவதாக வைத்துக்கொள்வோம் 5,000 ரூபாய் நட்டத்தை நீங்கள் ஈடு செய்ய வேண்டியிருக்கும்.

தங்கம்தான் தினமும் விலை ஏறிக்கொண்டே இருக்கிறதே அதனால் வாங்கிப்போடலாம் இறங்கினால் பார்த்துக்கொள்ளலாம் என்று தைரியமாக ரிஸ்க் எடுக்க நீங்கள் தயாராக இருந்தால் விளிம்புத் தொகையுடன் விலைகுறைந்தால் ஏற்படும் இழப்பிற்கு ஈட்டுத்தொகையாக கொஞ்சம் பணத்தை கைவசம் வைத்திருக்கவேண்டும். 100 கிராம் தங்கம் வாங்க 30,000 ஆயிரம் உங்கள் கணக்கில் இருந்தால் இன்று விலை குறைந்தாலும் நாளை விலையேறும் போதும் விற்று நட்டத்தை தவிர்ப்பதுடன் லாபத்துடன் வெளியே வரலாம்.


* எக்ஸ்சேஜ் (Exchange)
இந்தியாவை பொருத்தவரை MCX என்றழைக்கப்படும் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஜில் தங்கம் அதிகம் வர்தகமாகின்றுது. இந்தியாவில் தேசிய காமாடிட்டி எக்ஸ்சேஜ்கள் மத்திய அரசின் SEBI மற்றும் FMC (Forward Market Commission) ஆகியவற்றின் நேரடி கட்டுப்பாட்டில் வருகின்றன.


• லாட் சைஸ்
பொருள் வணிகத்தில் தங்கம் வாங்கும் போது நீங்கள் விரும்பும் எடைகளில் வாங்க முடியாது. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட அளவுகளில் மட்டுமே வாங்கி விற்க முடியும் இந்த அளவுகளை லாட் சைஸ் என்கிறோம். தங்கத்தை பொறுத்த வரை 1 கிலோ, 100 கிராம், 8 கிராம் அளவுகளில் கிடைக்கின்றது. முறையே GOLD, GOLD MINI, GOLD GUNIA என்ற பெயர்களில் இவை அழைக்கப்படுகின்றன.


• காண்ட்ராக்ட்
முன்பேர வணிகம், யூக வணிகம் என்பது தங்கத்தை பொறுத்தமட்டில் 2 மாத ஒப்பந்தகாலம் உடையதாகும். ஒப்பந்த இறுதி தேதிவரை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் வாங்கி விற்கலாம். வார நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 11.30 வரையும் சனிக்கிழமை காலை 10 மணிமுதல் மதியம் 2.00 மணிவரை வணிகத்தில் ஈடுபடலாம். ஞாயிறு மற்றும் விழாகாலங்களில் மார்கெட் இயங்காது.


• ஆன் லைன் வர்த்தகம்
தேசிய கமாடிட்டி எக்ஸ்சேஜ் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதால் நீங்கள் வீட்டிலிருந்தபடியே இணைய உதவுயுடன் தங்கத்தை வாங்கி விற்கலாம். அல்லது அருகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட புரோக்கிங் நிறுவனத்தில் நேரடியாக சென்று வணிகம் செய்யலாம்.


• புரோக்கிங் நிறுவனங்கள்
இந்த வர்த்தகத்தில் ஈடுபட MCX அங்கீகரிப்பட்ட புரோக்கிங் நிறுவனங்கள் மற்றும் அவர்களின் சப்-புரோக்கர்கள் மூலம் டிரேடிங் கணக்கிணை துவங்க வேண்டும்.


• தேவையான ஆவணங்கள்
பொருள் வணிகத்தில் ஈடுபடுவதற்கான கணக்கிணை துவங்க கீழ்கண்ட ஆவணங்கள் தேவை
1. PANCARD Xerox
2. Address Proof any one (a) Ration Card (b) Passport (c) Voter ID
3. Bank Passbook First Page and Statement Xerox (or) Canceled Cheque incase name printed in cheque.

For More details contact
K.S.Bhaskar,
9629862568

பாஸ்போர்ட் விண்ணப்ப குளறுபடிகள்



வேலைவாய்ப்பு வேண்டி வெளிநாடு செல்லும் இளைஞர்கள், வேலை நிமித்தமாக வெளிநாடு செல்ல புதிய பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பிப்பவர்கள் என்று மணிக்கணக்கில் சாஸ்திரி பவன் முன்பு வரிசையில் நிற்கும் அவல நிலை தொடர்ந்து இருந்தது. இந்த நிலை மாற Seva Project என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் 16 தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்தது. இந்த புதிய திட்டத்தின் படி சென்னை சாலிகிராமம், அமைந்தகரை மற்றும் தாம்பரம் ஆகிய மூன்று இடங்களில் பாஸ்போர்ட் மையங்களையும் http://passportindia.gov.in என்ற புதிய வலைதளத்தையும் அறிமுகப்படுத்தியது.

இந்த புதிய திட்டத்தின்ப வலைதளத்தில் புதிய விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துகொண்டு மேற்கண்ட மையங்களில் ஏதேனும் ஒன்றினை தேர்வுசெய்து நேர்காணலுக்கான நேரத்தினை பதிவு செய்து கொள்ளலாம். பின்னர் அந்த தேதியில் மையத்திற்கு நேரில் சென்று ஆவணங்களை சமர்பித்து பாஸ்போர்டுக்கான கட்டணத்தை செலுத்தலாம். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு மூன்று தினங்களில் பாஸ்போர்ட் வீடு தேடி வரும்.

அட்டாகாசமான திட்டம், அருமையான முறை என்று பெரும் ஆவலுடன் வரவேற்கப்பட்ட இந்த திட்டத்தை அமலுக்கு கொண்ட வந்த நாள் முதல் பல குளறுபடிகள்.

ஆன் லைனில் கணக்கு துவங்குதல், பாஸ்போர்ட் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்தல், தேவையான ஆவண நகல்களை ஆப்லோட் செய்வதுவரை எல்லாம் சரியாக உள்ளது. ஆனால் நேர்காணலுக்கான நேரத்தை மட்டும் தேர்வு செய்ய சென்றால் எப்போதுமே மேற்கண்ட மையத்தில் தற்போது நேர்காணல் நேரம் எதுவும் ஒதுக்க இயலாது என்ற பதிலே வருகின்றது.

இதனால் ஆன் லைனில் விண்ணப்பபித்துவிட்டு வாரக்கணக்கில் காத்துக் கிடப்பவர்கள் பழைய முறையே ஓரளவு பரவாயில்லை என்று புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

சில இடைத்தரகர்கள் குறிப்பிட்ட தொகையினை பெற்றுடக்கொண்டு நேர்காணலுக்கான நேரத்தை ஓதுக்கி தருகின்றனர். அவர்களால் மட்டும் எப்படி நேர ஒதுக்கீடு பெற முடிகிறது என்பது சிதம்பர ரகசியம்.

மேற்கண்ட குறைகள் களையப்பட்டால் புதிய பாஸ்போர்ட் திட்டம் அமோகமாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை.

பிளாக்கர் டொமைன்


BlogSpot Domain
பிளாக்கர் வலைதளத்தினை உருவாக்க பதிவு செய்யும்போது உங்களுக்கு பிளாக்ஸ்பாட்.காம் சப் டொமைன் இலவசமாக கிடைக்கும் உதாரணமாக yourname.blogspot.com ஆனால் நீங்கள் உங்களின் சொந்த .COM/.NET/.ORG/.IN டொமைன்களையும் உபயோகித்துக்கொள்ள பிளாக் ஸ்பாட் அனுமதி அளிக்கின்றது.
நீங்கள் ஏதேனும் டொமைன் பதிவு நிறுவனத்தை அணுகி உங்களுக்கான டாப் லெவல் டொமைனை பதிவு செய்து கொள்ள வேண்டும்,
இதற்கு கட்டணமாக ரூபாய் 500 வரை செலுத்தவேண்டியிருக்கும். இவ்வாறு பெறப்படும் டொமைனை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கவேண்டியது நமது கடமை.
டொமைன் பதிவு செய்யும்போது முக்கியமாக கவனிக்க வேண்டியது DNS Management என்னும் வசதியை அந்நிறுவனம் உங்களுக்கு வழக்குறதா என்பதைதான். பல நிறுவனங்கள் இவ்வசதியினை இலவசமாகவே வழங்குகின்றது. சில நிறுவனங்கள் சிறு தொகையை பெற்றுக்கொண்டு இவ்வசதியினை தரும். உங்கள் பிளாக்கினை புதிய டொமைன் கொண்டு இயக்க சில DNS ரிக்கார்டுகளை நீங்கள் மாற்ற வேண்டும். எனவே டொமைன் டி.என்.எஸ் மேனேஜ்மென்ட் வழங்கப்படுகின்றதா என்பதை தெரிந்து கொண்டு அந்நிறுவனத்திடம் டொமைன் பதிவு செய்வது நல்லது.
அடுத்ததாக கவனிக்க வேண்டியது கன்ட்ரோல் பேனல். நாம் வாங்கும் டொமைன், டி.என்.எஸ். ரிக்கார்டு ஆகியவற்றை கையாள ஏதுவாக கண்ட்ரோல் பேனல் வசதியினை அந்நிறுவனம் வழங்குகின்றதா என்பதை கவனிக்க வேண்டும்.
டொமைன் பதிவு செய்வதற்கு முன்பு என்னென்ன மாற்றங்களை உங்கள் பிளாக்கில் செய்ய வேண்டும் என்று பார்போம்.
உங்கள் பிளாக்கர் கணக்கில் சென்று







செட்டிங் என்ற லிங்கினை கிளிக் செய்யவும்











பின்னர் அதில் Publishing என்ற லிங்க்கை தேர்வு செய்து Custom Domain என்பதை தேர்வு செய்யவும்.இங்கு பிளாக்கர் மூலம் புதிய டொமைன் வாங்குவதற்கான இணைப்பு கிடைக்கும் அதன் அருகில் Already own a domain? Switch to advanced settings
என்ற இணைப்பில் சொடுக்கவும்.







இதில் உங்கள் புதிய டொமைனை குறிப்பிடவும் உ.ம் yourdomain.com பின்னர்
Save செய்யயும்.

பின்னர் நீங்கள் டொமைனை பதிவு செய்த நிறுவனம் அளித்த கண்ட்ரோல் போனல் சென்று DNS Management என்பதை தேர்வு செய்யவும். அதில்
CNAME Record என்பதை தேர்வு செய்து
www    ghs.google.com என கொடுக்கவும்.

அவ்வளவுதான். மேற்கண்ட டி.என்.எஸ் 24 மணிநேரம் முதல் 48 மணி நேரத்திற்குள் செய்ல்பட துவங்கி உங்கள் பிளாக் உங்கள் மொமைன் பெயரில் இயங்கத் துவங்கிவிடும்.