Sunday, February 11, 2018

கூகுள்ஆட்சென்சில் தமிழ் மொழி | Tamil Language Support in Google Adsense


தமிழ் வலைதளங்களை நிறுவி நடத்திவரும் பலருக்கு வலைதளங்களுக்கு விளம்பர வருவாய் ஈட்டித்தரும் கூகுள் ஆட்சென்சில் தமிழ்மொழிக்கான அங்கீகாரம் இல்லாமல்  இருந்ததுதான். ஆங்ககிலம் மற்றும் இந்தி உட்பட பல மொழிகள் கூகுள் ஆட்சென்சில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும் தமிழ் மட்டும் இதுநாள் வரை ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்தது.
இந்நிலையில் கடந்த 9.2.2018 அன்று கூகுள் நிறுவனத்தின் பிளாக்கில் தமிழ் மொழி இணைக்கப்படுள்ளதாக அறிவித்தது.
இதன் மூலம் தமிழ் வலைதளங்கள் மற்றும் பிளாக்கில் இனி கூகுள் விளம்பரங்களை பார்க்க முடியும். இதன் மூலம் வலைதளம் நிறுவி நடத்தி வருபவர்களுக்கு வருவாய் கிடைக்கும் என்பதால் தமிழ் வலைதளங்கள் மற்றும் பிளாக்கினை நிறுவ பலர் முன் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Google Adsense Tamil Language support


Friday, February 9, 2018

ரூபாய் 500க்கு ஸ்மார்ட் போன் | Smart Phone for Rupees 500?அம்பானியின் ஜியோ நிறுவனத்தின் அதிரடி ஆஃபர்களை சமாளிக்க ரூபாய் 500க்கு ஸ்மார்ட் போன் வழங்க பாரதி ஏர்டெல், வோடோபோன் மற்றும் ஐடியா  ஆகிய நிறுவனங்கள் முனைப்புடன் ஈடுபட்டுள்ளதாக தி எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் ரூபாய் 49க்கு 28 நாட்கள் அளவில்லாத வாய்ஸ் கால்கள் வழங்கும் ஜியோவின் இந்த அதிரடி ஆஃபருக்கு பதிலடி தரும் வகையில் ரூபாய் 60 முதல் 70க்குள்ளாக மாத கட்டணத்தில் அளவில்லா வாய்ஸ் கால்கள் வழங்கவும் முடிவுவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த கட்டண குறைப்பின் மூலம் ஏற்படும் இழப்பினை ஈடுசெய்ய புதிய வாடிக்கையாளர்களை இன்டர்நெட் டேட்டா பயன்பாட்டிற்கு கொண்டுவரும் வகையில் பல்வேறு முடிவுளை எடுத்துள்ளார்களாம்.
இந்த நிறுவனங்களின் முடிவால் இந்தியாவில் ஸ்மார்ட் போன் விலைகள் வெகுவாக குறையக்கூடும் என்று தெரிகிறது.
எது எப்படியோ வாடிக்கையாளர்கள் இன்னும் சிறிது காலத்தில் குறைந்த விலையில் ஸ்மார்ட் போன்களை வாங்கலாம்.
Smart Phone for 500 Rupees

Buy Smart Phone for Rupees 500

எந்த ஸ்மார்ட் போனிலும் ஜியோ 49 பிளான் | JIO 49 PLAN in Any Mobile

கடந்த குடியரசு தினத்தன்று ஜியோ தனது தனித்துவமான 49 பிளானை அறிமுகப்படுத்தி வழக்கம் போல் போட்டி நிறுவனங்களை பீதியில் ஆழ்த்தியது.
இந்த புதிய திட்டத்தின் படி 49 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்கள் அளவில்லா அவுட் கோயிங் கால்கள் 1 ஜிபி இன்டர்நெட். நாள் ஒன்று 50 இலவச எஸ்.எம்.எஸ் ஆகியவை பெற முடியும்.
இன்டர்நெட் பயன்பாடு இல்லாத அல்லது குறைந்த அளவே இன்டர்நெட் டேட்டாவை பயன்படுத்துபவர்களை மனதில் கொண்டு இந்த புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த 49 ரூபாய் பிளானை அனைத்து ஸ்மார்ட் போனையிலும் உபயோகிக்க முடியாது. 1500 டெபாசிட் கொண்ட இலவச ஜியோ போனில் மட்டுமே உபயோகிக்க முடியும் என்று ஜியோ தெரிவித்துள்ளது.
ஆனால் உங்கள் ஜியோ சிம்மை உங்கள் நண்பர் அல்லது உறவினர் போனில் செலுத்தி 49 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து கொண்டு பின்னர் சிம் கார்டை உங்கள் ஸ்மார்ட் போனில் வழக்கம் போல் உபயோகிக்கலாமாம். இப்படி செய்தால் அடுத்த 12 மாதங்கள் உங்கள் ஸ்மார்ட் போனிலே 49 திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்து உபயோகிக்கலாம் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.
|
How to use Jio Rs.49 Plan in any phone | Jio Trick 


Thursday, February 8, 2018

அரசு இ சேவை மையம் நடத்த விண்ணப்பிக்க காலகெடு நீட்டிப்பு

தமிழக அரசின் கேபிள் டிவி கார்பரேஷன் மூலம் நடத்தப்பட்டு வரும் இசேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு நகராட்சி. போரூராட்சி மற்றும் தாலுக்கா தலைமையகங்களில் தகுதி வாய்ந்த நபர்களிடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
மேற்படி இசேவை மையங்களில் வருமான சான்றிதழ். சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், விதவை சான்றிதழ் உட்பட மொத்தம் 81 வகையான சேவைகளை பெற முடிவும்.
இதற்கு விண்ணப்பிக்க 12/02/2018 கடைசி தினமாக அறிவிக்கபட்ட நிலையில் தற்போது 26.02.2018 வரை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப படிவத்துடன் ரூபாய் 10000க்கான வரைவோலையுடன் 26/02/2018ம் தேதி மதியம் 3 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்,

தேர்தெடுக்கப்படும் நபர் ரூபாய் 50000க்கான வரைவோலையினை அரசு கேபிள் டிவி கார்பரேஷனுக்கு டெபாசிட் தொகையான அளிக்க வேண்டும். கணினி உள்பட அனைத்து உபகரணங்களையும் விண்ணபதாரர் வைத்திருக்க வேண்டும். பெறப்படும் கட்டணத்தில் 70 சதவீதம் நடத்துனருக்கும், 30 சதவீதம் அரசு கேபிள் டிவி கார்பரேஷனுக்கும் வழங்கப்படும்.

விண்ணபப்ப படிவத்தினை அரசு கேபிள் டிவி கார்பரேஷன் வலைதளத்தில்  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TACTV Channel List for RS.225 Plan | New FEB. 2018

TACTV (RS.225 Plan) has 410 Channels including 30 HD Channels, 177 Pay Channels and 203 Free to Air Channels. including 18% GST. Customer want to pay Rs.270 (approx.)
TACT Digital Channel list for Rs.175 Plan | New Feb.2018

TACTV Channel list for Rs.175 Plan.The plan has 300 Channels including 142 Pay Channels and 158 Free to Air channels. This pack has 18% GST So Customer need pay Rs.210 (Approx.) This pack covers Tamil regional channels, English News Channel, Kids channels and infotainment channelsTACTV Channel List for 125 Plan | Feb. 2018